மலையக சமுதாயத்தின் கலை, கலாசார, இலக்கிய, பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் நோக்கில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
மத்திய மாகாண விவசாய, தமிழ் கல்வி, இந்து கலாசார அமைச்சர் எம்.ரமேஸின் வழிகாட்டலில் இந்த சாகித்தியா விழா நுவரெலியா நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலை மாணவர்கள், பெருந்தோட்டத்துறை கலைஞர்கள் பங்குபெறும் விசேட கலாசார அம்சங்கள் நிறைந்த ஊர்வலம் நுவரெலியா நகரில் ஆரம்பிக்கப்பட்டு நகரசபை மண்டபம் வரை பவனி செல்லும் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி முற்பகல் 9 மணி தொடக்கம் நுவரெலியா நகர சபை மண்டபத்திலே பல்வேறு கலை, கௌரவிப்பு, பரிசளிப்பு நிகழ்வுகள், கண்காட்சிகள், சாகித்திய விழா மலர் வெளியீட்டு நிகழ்வு என்பன இடம்பெறவுள்ளன.