பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் தாம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை விட்டு செல்லபோவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
தாம் அரசாங்கத்தில் இருந்து விலகும் எண்ணத்திலே இருந்ததாகவும் முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதி அமைச்சராக கடமையாற்றிய அருந்திக்க பெர்ணான்;டோ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்;டது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 46(3)(அ) உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கேற்ப இந்த பதவி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது