ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மேம்பாடு, நீதி, நட்டயீடு வழங்கல் மற்றும் மீள இடம்பெறாமையை உறுதிப்படுத்துவதற்கான சிறப்பு அறிக்கையாளர் பஃப்லோ டி க்ரீஃப் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 36வது அமர்வில் வைத்து உரையாற்றுகையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி முதல் 23ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கி இருப்பார்.
இந்த காலப்பகுதியில் அவர் பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அவர் கடந்த 2016ம் ஆண்டு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.