வெலிகடை சிறைச்சாலை சம்பவம்: மனு ஒத்திவைப்பு!

268 0

வெலிகடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதை இரண்டாவது முறையாக மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
இன்று குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை என தெரியவந்துள்ளது. எனவே, மனு மீதான விசாரணைகளுக்கு பிரிதொரு தினத்தை வழங்குமாறு அவரது சார்பில் கோரப்பட்டது. இதற்கமைய, குறித்த மனுவை ஒக்டோபர் 17ம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a comment