மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில், மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்ள 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அப் பாடசாலை அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று பாடசாலை வளாகத்தில் வைத்தே இவரைக் கைதுசெய்துள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவர் அப் பாடசாலையில் மூன்றாம் தரத்தில் சேர வந்த மாணவர் ஒருவரிடமே இலஞ்சம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த பணத்தை அவர் வர்த்தகர் ஒருவர் மூலமாகவே பெற்றுக் கொண்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.