நோர்வே பொதுத் தேர்தலில் எர்னா சோல்பெர்க் வெற்றி

137145 13
நோர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதனைத் தொடர்ந்து இரண்டாவது பதவி காலத்தை தொடரும் தகுதியை பெற்றுள்ளார்.
நோர்வே பொதுத் தேர்தல் அண்மையில் இடம்பெற்றது.
இந்த நிலையில் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணி 95 சதவீகிதம் நிறைவு பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நோர்வே நாட்டின் நாடாளுமன்றத்தின் 169 ஆசனங்களில் 89 ஆசனங்களை பிரதமர் எர்னா சோல்பெர்க் தலைமையிலான கன்சவேட்டிவ் கட்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.