சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகத்திற்குரிய ஒருக்கு 50 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மேல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பை அறிவித்தது.
தியத்தலாவ – எல்லகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளார்.
2013 வருடம் ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்தார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.