செம்மலைப் பகுதியில் தடைசெய்யப்பட்ட முறையில் உழவு இயந்திரம் மூலம் இழுவை மடித் தொழில் புரிந்த ஆறுபேரைக் கைது செய்த நீரியல்வளத் துறைத் திணைக்களம் இரு உழவு இயந்திரங்களையும் கைப்பற்றினர்.
செம்மலைப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பத்தில் உள்ளூர் மீனவர்கள் ஆறுபேரை திணைக்கள அதிகாரிகள் கைது செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய இரு உழவுயத்திரங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்திய கயிறு என்பனவற்றையும் கைப்பற்றிச் சென்றனர்.
கடற்றொழில் சட்டத்தில் தடை செய்யப்பட்ட முறைகளில் ஒன்றான குறித்த தொழில் முறையை கையாண்ட குற்றத்தின் பெயரிலேயே மேற்படி ஆறுபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆறுபேறும் சான்றுப் பொருட்களுடன் இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆயர் செய்யப்படவுள்ளதாக நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.