ஓக்டோபர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தவிருந்த முச்சக்கரவண்டிகளுக்கான மீட்டர் கட்டாயப்படுத்தல் சட்டம் காலதாமதமாகும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
குறித்த சட்டத்திற்கு எதிராக சில முச்சக்கரவண்டி சங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
எனினும் குறித்த சட்டம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.
அதுவரை இந்த சட்டம் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.