சிறிலங்கா சுதந்திர கட்சியில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனும் ஜனாதிபதி இன்று சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.
இன்று இரவு 8 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக, சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது 20ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தவாரம் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், அதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் அண்மைக்கால அரசியல் செயற்பாட்டு முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான சந்திப்புகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.