டெங்கு நோயினால் 360 பேர் உயிரிழப்பு

244 0

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் டெங்கு நோயினால் 360 பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சும், தொற்றுநோய் தடுப்புப் பிரிவும் இதனை அறிவித்துள்ளன.

அத்துடன் இந்த காலப்பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 407 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, டெங்கு நோய் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, புத்தளம், ரத்தினபுரி, காலி, மாத்தறை, கொழும்பு, கேகாலை, கம்பஹா, குருணாகலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் டெங்கு அச்சுறுத்தல் அதிகம் உள்ளது.

எனவே பொதுமக்கள் டெங்கு பரவல் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்புகள் உருவாகிக் பரவும் வகையில் தங்களது வீட்டுச் சூழலை வைத்திராமல், தொடர்ந்து சுத்திகரிப்பு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment