பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் தாமதம் – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வருத்தம் 

650 0

அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டிய நடவடிக்கைகளை, மனித உரிமைகள் பேரவையை சமாதானப்படுத்துவதற்கானவையாக கருதக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 36வது மாநாட்டை ஆரம்பித்து உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹூசைன் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, நீதிவழங்கும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் காணிகளை திருப்பியளித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், காணாமல் போனோர் அலுவலகத்தை உடனடியாக நியமித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

இந்த செயற்பாடுகளுகான கால நிர்ணயம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இவ்வாறான விடயங்கள் அனைத்தும் இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவனவே தவிர, ஐக்கிய நாடுகள் சபையை திருப்திப்படுத்துவதற்கானவை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், மறுசீரமைப்பு செயற்பாடுகளிலும் பொறுப்புக்கூறல் விடயத்திலும் அரசாங்கம் காட்டி வருகின்ற அதிக தாமதம் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

Leave a comment