ரோஹிங்ய போராளிகளினால் நேற்று பிரகடனப்படுத்தப்பட் ஒரு மாத கால போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மியன்மார் தெரிவித்துள்ளது.
மியன்மார் இராணுவம் இந்த காலப்பகுதியினில் தமது ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பயங்கரவாதிகளுடன் மியன்மார் அரசாங்கம் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட தாயாரக இல்லை என அரசாங்க பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 25ஆம் திகதி போராளிகள் பல காவல் நிறையங்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலின் போது 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில், அரச படைத்தரப்பினர் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து சுமார் 3 லட்சம் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லீம்கள் எல்லை தாண்டி பங்களாதேஷ் சென்றுள்ளனர்.
பெரும்பான்மையான பௌத்தர்கள் சிறுபான்மையான முஸ்லீம்களுக்கு எதிராக பாரிய வன்செயல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பல கிராமங்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுபான்மையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை மறுதளித்துள்ள மியன்மார் அரசாங்கம், பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே இராணுவம் செயல்படுவதாக தெரிவித்துள்ளது.