சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் நிலைப்பாட்டுக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
நாளை ஆரம்பமாகும் இந்த சேவைப்புறக்கணிப்பு போராட்டம் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய நாளைய தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.