வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டவர்களை சந்திக்க சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் நிரந்தரநியமனத்திற்கு ஒருமாத காலம் அவகாசம் கேட்டுக்கொண்டார் என தகவல்கள் வெளியாகிருந்தன.
குறித்த நியமனம் தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த வடமாகாண சுகாதார அமைச்சர் பதிலளிக்கையில்,
“ஒரு மாதகாலம் அவகாசம் அவர்களின் நியமனத்திற்கு வழங்கியுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது, நான் அவ்வாறான வாக்குறுதி வழங்கவில்லை, சுகாதாரத் தொண்டர்களின் நியமனம் மத்திய அமைச்சுடன் தொடர்புள்ள விடயம், பல சுகாதார தொண்டர்கள் தொழில்வாய்ப்பு கேட்டுள்ளார்கள், இவர்கள் பல துறைகளை சேர்ந்தவர்கள், எனவே இவர்களுக்கான நியமனத்தினை வழங்க வேண்டும் என நான் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன், அதற்கான நடைமுறைகள் இடம் பெறுகின்றது, எதிர்வரும் சில நாட்களில் நிதி அமைச்சரை சந்திக்கவுள்ளேன், அதன்போதும் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுவேன்” என தெரிவித்தார்.