மட்டுவில் குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

308 0

கடந்த இரு வாரகாலத்திற்கு மேலாக மட்டக்களப்பு மாநகரசபையினால் பொதுமக்களின் இல்லங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் மக்கள்  பாரிய அசெளகாரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவிற்கு  முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பட்டமொன்றை மேற்கொண்டனர்.

மாநகர சபையினரின் குறித்த அசமந்த போக்கின் காரணமாக மட்டக்களப்பு பூராகவும் துர்நாற்றம் வீசும் நிலை உருவாகியுள்ளது என்றும் பாதையோரங்களிலும், வாவிகளிலும், வடிகான்களிலும் கழிவுகளை மக்கள் போடுவதனால் மட்டக்களப்பு நகரம் முழுவதும் குப்பைகள் நிரம்பி வழிகின்றது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதனால் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுவதால்  தொற்று  நோய் உருவாகும் அபாயம் தோன்றியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபயின் மட்டக்களப்பு விஜயத்தை தொடர்ந்து அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் கழிவு அகற்றல் தொடர்பாக இடம்பெற்ற  இரகசிய கலந்துரையாடலை அடுத்து  உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கிழக்கு மாகாணசபை, மாநகரசபை உதவுவதாகவும்  கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறி இன்றுடன் 16 நாட்கள் நகர்ந்தும் இதுவரை  எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Leave a comment