கடுவெலயில் இருந்து கொழும்புக்கு இலகு ரக ரயில் சேவை !-பாட்டலி

265 0

கடுவெலயிலிருந்து, கொழும்பு கோட்டை வரை இலகு ரக ரயில் சேவையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:
ஜப்பான் அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது, அதற்கான பரீட்சார்த்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அடுத்த வருட இறுதிப் பகுதியளவில் ரயில் சேவையுடன் சம்பந்தப்பட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும். அதேவேளைக் குறித்த ரயில் சேவையை அமைப்பதற்குத் தேவையான காணிகளைச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment