மாத்தறை நீதவான் நீதிமன்ற ஆவண அறையில் திருட்டு

242 0

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு ஆவணங்கள் வைத்திருக்கும் அறைக்குள் கள்வர்கள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இன்று காலை தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் கள்வர்கள் எப்போது நுழைந்தார்கள் என்பது தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வழக்கு ஆவண அறையில் உள்ள ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment