இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியான மழை பெய்யும் என காலநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை அதிகமாக பெய்யும் என்பதுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் காலி, மாத்தறை, இரத்தினபுரி, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் மழை காரணமாக பாதிப்படையலாம் என காலநிலை அவதான மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.