முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஒரு மாதங்களுக்கு வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 16ம் திகதி முதல் ஒக்டோபர் 16ம் திகதி வரை அவர் வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறும், நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கை மீண்டும் ஒக்டோபர் 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்க வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்பட்டு டிரானுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.