தமிழீழ தாகத்துடன் தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.- நாள் 5

44832 0

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் ஐந்தாவது நாளாக மீண்டும் நேற்றைய தினம் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு யேர்மன் நாட்டின் சார்புருக்கன் நகரத்தை கடந்து பிரான்சு நாட்டை நோக்கி பயணித்தது. நேற்றைய பயணத்தில் வேற்றின ஈருருளிப் பயண வீரர்களோடு ஏற்பட்ட சந்திப்பில் எமது மனிதநேய ஈருருளிப் பயணத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தியதோடு துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்கள். இன்றைய தினத்தில் பிரான்சு கிழக்கு பிராந்திய நகர பிதாக்களுடன் சந்திப்புகள் நடைபெறுவதோடு மற்றும் மக்கள் சந்திப்புகளுடன் மாவீரர்கள் தியாகத்தை சுமந்து பயணிக்கும்.

எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால்,ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a comment