பாடசாலைக்கு செல்லாது இடைவிலகும் மாணவர்கள் பிடிபடுவர்

331 0

புதிய கல்வி கொள்கைக்கு அமைய இலங்கையில் கல்வித் துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரபட்டு வருகின்றன.

அதில் ஒன்று தான் 30 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட “பரிசோதகர் மேற்பார்வை” (Inspector Supervising) மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது.

அதேவேளை, ஊர் ஊராகவும், தோட்டம் தோட்டமாகவும் சென்று பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை பிடித்து கொண்டு வந்து மீண்டும் அவர்களை பாடசாலைக்கு சேர்க்கும் விஷேட குழுவொன்று நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அம்பகமுவ பிரதேசம் வெலிஓயா தோட்டம் கீழ் பிரிவிற்கான கொன்கிரீட் வீதி மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு பாவனைக்காக மக்களிடம் கையளிக்கபட்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் ராஜாங்க கல்வியமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

இதன்போது இங்கு கருத்து தெரிவிக்கையிவேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த செயற்திட்டத்தின் ஊடாக பாடசாலைக்கு மாணவர்கள் செல்லாத காரணங்கள் இனங்காணப்பட்டு அதற்கான உதவிகளும் மேற்க்கொள்ளப்படும்.

இலங்கையில் படிக்காதவர்கள் இருக்க கூடாது என்பதற்காகவும் படித்தவர்களின் கல்வி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் வறுமை மற்றும் வேறு காரணங்களினால் பாடசாலை கல்வியை இடையில் விட்ட சிறார்களை கல்வி கற்க வைப்பதற்காகவும் இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கபடவுள்ளது என்று கூறினர்.

இந்தநிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர். ராஜாராம் மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ்.விஸ்வநாதன் பணிப்பாளர் எம்.கனகராஜ்¸ முன்னணியின் சிரேஷ்ட பிரதி தலைவர் எஸ்.கிருஸ்ணன் முன்னனியின் பிரதி பொது செயலாளர் எம்.பிரசாந் உட்பட மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment