நபர்கள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இருப்பது அவசியம் என, அண்மையில் வர்த்தமானியில் வௌியிடப்பட்டது.
போக்குவரத்து அமைச்சினால் வௌியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
இதன்படி, முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் நபர்களுக்கு சாரதியால் ரிசிட் வழங்கப்படுவது கட்டாயமாகும்.
பயணிக்கும் தூரம், வாகனப் பதிவிலக்கம், அறவிடப்பட்ட பணம் மற்றும் வழங்கப்பட்ட தினம் ஆகியன அதில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என, அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, முச்சக்கர வண்டிகளுக்கான புதிய மீற்றர்களை விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
அது தரமான மீற்றர் எனவும் அந்த சபை கூறியுள்ளது.
பயனாளர்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் என அச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.