இலங்கை மருத்துவ சபையின் விசேட கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
சயிட்டம் பிரச்சினைக்கு தீர்வின் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
மருத்துவ சபையின் உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.
பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தலைமையிலான அந்த ஆணைக்குழுவில் சுகாதார செயலாளர், உயர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டவர்கள் இந்த குழுவின் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.