அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்து பொதுக்குழு கூட்டுவதற்கு தடை விதிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அ.தி.மு.க.வின் அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் நாளை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
பொதுக்குழு கூட்டுவதற்கு பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் ஆதரவு வெற்றிவேல் எம்.எல்.ஏ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தனர். வெற்றிவேல் தனிப்பட்ட முறையிலே இந்த வழக்கு தொடர்ந்துள்ளார் எனவும், அவர் விருப்பப்பட்டால் பொதுக்குழுவில் கலந்து கொள்ளலாம் இல்லையென்றால் வீட்டில் இருக்கலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்தால் வெற்றிவேலுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.