அம்பன்பொல – தெமடவெவ பகுதியில் கிணற்றில் விழுந்து சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பயிர்ச் செய்கைக்காக அமைக்கப்பட்ட கிணற்றிலேயே இந்த குழந்தை விழுந்துள்ளது.
இதனையடுத்து, மூன்றரை வயதான அந்தக் குழந்தையை மீட்ட பிரதேச மக்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அக் குழந்தை மரணமடைந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.