மலையகத்தில் தொடரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. லக்ஷபான மற்றும் கெனியன் நீர்தேக்கங்ங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கெனியன் நீர்தேக்கத்தில் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதுடன் லக்ஷபான நிர்தேக்கத்தின் 1 வான் கதவு திறந்து விடப்பட்டுள்ளதாக லக்க்ஷபான மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
களனி ஆற்றை அண்டிய பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மஸ்கெலியா – மவுசாக்கலை நீர்தேக்கத்துடன் கலக்கும் மொக்கா நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்துள்ளதையும் மவுசாக்கலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.