இன்­றுடன் 5­வது நாளாக அர்ஜூன் அலோசிய­ஸிடம் விசா­ரணை

247 0

பேர்ப்­பச்­சுவல் ட்ரெ­ஷரிஸ் நிறு­வனப் பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சியஸ் 5­வது நாளாக இன்றும் பிணை ­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரிடம் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

பேப்பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்­பிலும் தன்­மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை தெளி­வு­ப­டுத்தும் நோக்­கிலும் விசேட அறிக்­கை­யொன்றை வழங்க நான்கு நாட்­க­ளாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் முன்­னி­லையில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் நேற்று சுமார் 6 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேல் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு  விசா­ர­ணை­களை நிறைவு செய்­தி­ருந்­தது. நேற்று காலை 10 மணிக்கு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் முன்­னி­லையில் ஆஜ­ரா­கி­யி­ருந்த அர்ஜூன் அலோ­சி­ய­சிடம் பிற்­பகல் 5 மணி­ய­ளவில் நேற்­றைய நாளுக்­கான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­தி­ருந்­தது.

அர்ஜூன் அலோ­சி­ய­ஸிடம் இன்று ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ர­ணை­களை பதி­வுச்­செய்­ய­வுள்ள நிலையில் கடந்த நான்கு நாட்­களும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் அறிக்­கையும் இன்று ஆணைக்­கு­ழு­வுக்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அர்ஜூன் அலோ­சி­ய­ஸிடம் நான்கு நாட்கள் விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தா­கவும் இன்று ஆணைக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளிக்க உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கவும் அரச சட்­டத்­த­ர­ணிகள் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்­தனர். பேப்­பச்­சுவல் ட்சரிஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜூன் அலோ­சி­யஸை மத்­திய வங்கி பிணை முறி தொடர்­பான ஆணைக்­குழு சாட்­சி­ய­ம­ளிக்க அழைத்­த­மையை சவா­லுக்கு உட்­ப­டுத்தி சட்­ட­வ­ரைபு ஒன்றை சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக அலோ­சி­யஸின் சட்­டத்­த­ரணி அர்ஜூன் பிரே­ம­ரட்ன தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் அர்ஜூன் அலோ­சியஸ் இன்று சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு முன்னர் சத்­திய கட­தாசி ஒன்றை வழங்­க­வேண்டும் என்றும் ஆணைக்­குழு நேற்று முன்­தினம் உத்­த­ர­விட்­ட­மையே   குறித்த தீர்­மா­னத்தை எடுக்க நேரிட்­ட­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார். குறித்த சட்ட நட­வ­டிக்­கையின் அடிப்­ப­டையில் ஆணைக்­குழு தமது உத்­த­ரவை மீள்­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்டும் என்று கோரப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை அலோ­சியஸ் இன்று சாட்­சியம் வழங்­கும்­போது ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி காமினி மாரப்­ப­னவும் அவர் சார்பில் முன்­னி­லை­யாவார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தொலை­பேசி கலந்­து­ரை­யா­டல்கள் அனைத்தும் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் குறித்த கலந்­து­ரை­யா­டல்கள் தொடர்பில் அர்ஜூன் அலோ­சி­யசின் நிலைப்­பாடு தொடர்­பாக விசா­ர­ணைகள் நேற்று மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. மேலும் குரல் பதி­வு­களின் அடை­யா­ளங்கள் தொடர்பில் அவர் விளக்­க­ம­ளித்­தி­ருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

ஏற்­க­னவே பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வனம் சார்­பாக முன்­லை­யா­கி­யி­ருந்த சட்­டத்­த­ர­ணியும் அர்ஜூன் அலோ­சியஸ் சார்­பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணியும் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் என தெரிவித்துள்ள நிலையில் நேற்றும் அர்ஜூன் அலோசியசுடனான விசாரணைகளின்போது ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன விசாரணைகளுக்கு ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, தற்போதைய வெளிவிவகார அமைச்சர் திலக்  மாரப்பனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment