முச்சக்கர வண்டிக்கான மீட்டர் பொருத்தி, பற்றுச் சீட்டு வழங்கும் படி அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ள சட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இருப்பினும், அரசாங்கம் வெளியிட்டுள்ள சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு பல முச்சகர வண்டி சங்கங்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது