காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை தொடர இடம்தர மறுக்கும் கோவில் நிர்வாகம். இவ்விடயம் தொடர்பில் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று 203 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில் வருடாந்த திருவிழாவிற்காக பந்தலை அகற்றி இடமளித்த நிலையில் இன்று குறித்த பகுதியில் தொடர்ந்தும் போராட அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்து குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.