சிரியாவில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் 34 பொதுமக்கள் பேர் கொல்லப்பட்டனர்.
சர்வதேச ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன.
இந்த நிலையில், சிரியாவில் ரஷ்யாவின் வானுர்திப் படையினர் நடத்திய தாக்குதலில் 34 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவின் டேர் எஸ்ஸர் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து ரஷ்ய வானுர்திப்படை நடத்திய தாக்கதலில் 9 குழந்தைகள் உட்பட 34 கொல்லப்பட்டுள்ளதாகவும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உறுதிசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.