தடைகளை மீறி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா பொருட்கள் ஏற்றுமதி – ஐ.நா குற்றச்சாட்டு

281 0
வடகொரியாவினால் இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக பொருட்கள் அனுப்பிவைக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை மீறிய வகையிலேயே இந்த செயற்பாடு இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியா டிசம்பர் மாதத்தில் இருந்து கடந்த 6 மாதங்களாக நிலக்கரி, இருப்பு போன்ற பொருட்களை இவ்வாறு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் இலங்கை, இந்தியா, மலேசியா மற்றும் சீனாவுக்கு இந்த பொருட்கள் அனுப்புவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வடகொரியாவினால் பொருளாதார தடை மீறப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் 8 நிபுணர்களை கொண்ட குழுவினால் தாயாரிக்கப்படட அறிக்கை ஒன்றில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த விசேட நிபுணர்கள் குழு 111 பக்க அறிக்கையை தயார் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வடகொரிய தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஏவுகணை சோதனைகள் குறித்து தாம் வன்வமையாக கண்டணத்தை வெளியிடுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment