உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பான இருபதாம் திருத்தம் எதிர்வரும் இருபதாம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பிலான உயர்நீதிமன்ற அறிக்கை எதிர்வரும் வாரத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய குறித்த சட்டமூலம் எதிர்வரும் 20 ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கிகாரமும் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.