பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாம் பதவி விலகுவதாக இராணுவ சேவை அதிகார சபையின் பல்லேபொல இராணுவ அமைப்பின் தலைவர் சரத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றைய தினம் சரத் பொன்சேகாவிற்கு எதிராக அனுராதபுரத்தில் நேற்றைய தினத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
விசேட தேவையுடைய முன்னாள் இராணுவ வீரர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.