ஆளும் அரசாங்கத்தின் தீர்மானங்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையேல் லலித் வீரதுங்கவுக்கு நேர்ந்த கதியே ஏனைய அரச அதிகாரிகளுக்கும் நேரும் எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
மெல்சிறிபுர பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இவர் இதனை தெரிவித்தார்.
இன்று நாட்டில் பழிவாங்கும் அரசியல் கலாசாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் மஹிந்த குறிப்பிட்டார்.