கடந்த வியாக்கிழமை மெக்ஷிகோவில் இடம்பெற்ற நிலஅதிர்வு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்வடைந்துள்ளது.
தென்மேற்கு மாநிலமான ஓக்ஷகாவில் மாத்திரம் 71 பேர் பலியாகியதாக அரசினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நூற்றுக் கணக்கான குடும்பங்கள் அச்சமடைந்த நிலையில், வீதி ஓரங்களில் தங்கியுள்ளனர்.
கடந்த நூறாண்டு காலப்பகுதியில் இவ்வாறான ஒரு நிலஅதிர்வு உணரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமையும் அந்த பிரதேசத்தை சூறாவலி தாக்கியுள்ளது.
இதனிடையே அங்கு பெய்துவரும் கடும் மழைக்காலமாக 2 பேர் சேற்றில் புதையுண்டு மரணித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.