கிளிநொச்சி – கண்ணகிபுரம் பகுதியில், வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 2 வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்தது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குழந்தையின் தந்தை கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தர்மப்புரம் காவல்நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய போது, தீக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.
எனவே இது குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவதாவும் அவர் குறிப்பிட்டார்.