கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அதில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் இன்று இதனை தெரிவித்தார்.
கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து பல்கலைக்கழக மாணவாகள் கடந்த 3 மாதங்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில், கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை, அங்கு நிலவும் பிரச்சினையை ஆராய்வதற்காக மத்தியஸ்த குழு ஒன்றை நியமித்தது.
இதனையடுத்து குறித்த குழு மற்றும் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது உடன்படிக்கள் பல கைச்சாத்திடப்பட்டமையை அடுத்து சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவாயிலில் கடந்த 3 மாதங்களாக அமைத்திருந்த சத்தியாக்கிரகப் பந்தல் மற்றும் கறுப்புக் கொடிகளையும் அகற்றி போராட்டத்தை கைவிட்டனர்.