கடை ஒன்றில் தீ பற்றியதால் குழந்தை பலி, தந்தை காயம்

14812 0

கிளிநொச்சி புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தீப்பரவல் சம்பவத்தில் 2 வயது சிறுவன் உயிரிழந்ததுடன், குழந்தையின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

மூவர் கொண்ட குழு வர்த்தக நிலையத்தின் மீது பெற்றோர் விசிறி தீவைத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிசார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த கடையில் இருந்த கண்காணிப்புக் கருவி என்பவற்றையும் தர்மபுரம் பொலிசார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதில் எவ்வாறு தீ ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்

Leave a comment