‘ஏர்மா’ சூறாவளி தென் புளோரிடா பிரதேசத்தை தாக்க தொடங்கியுள்ள நிலையில், இன்னும் சில மணி நேரத்தில் மத்திய புளோரிடாவை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அமெரிகாவின் இந்த மானிலத்தின் கடல்மட்டம் அசாதாரண நிலையில் உயர்ந்துள்ளதனால் சூறாவளியின் தாக்கம் பெரிதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
63 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த மானிலத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் படி மக்கள் நேற்று பணிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இயற்கை அனர்த்தம் முன்னர் கரேபியன் தீவுகளை தாக்கியதில் குறைந்தது 24 பேர் பலிகாகியுள்ளனர்.