தமிழரசு கட்சியின் ஆதரவில்லாமல் சீவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சாத்தியமில்லை – எம்.கே. சிவாஜிலிங்கம்

5351 25

தமிழரசு கட்சியின் ஆதரவில்லாமல் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவது நடைமுறையில் சாத்தியமில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ. ஜயதிலக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக மாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கத்திடம் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.