வெடிகுண்டு பீதி காரணமாக இங்குள்ள பத்து பெராண்டாம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இந்தோனிசியாவின் பெக்கான் பாருவுக்குப் புறப்படவிருந்த விமானம் இரண்டு மணிநேர தாமதத்திற்குப் பிறகு புறப்பட நேர்ந்தது.
காலை 10.50 மணியளவில் மூன்று இந்தோனிசியப் பயணிகள் பேசிக் கொண்டதை செவிமடுத்த விமான ஊழியர், அந்தப் பயணிகளின் பேக்குகளுக்குள் திரவ வகை வெடிகுண்டு இருப்பதாக தவறுதலாகப் புரிந்து கொண்டதால் உடனடியாக அந்த மூவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
வெடிகுண்டு அகற்றும் பிரிவினரும் வரவழைக்கப்பட்டனர். இது தவறான புரிந்துணர்வின் காரணமாக நிகழ்ந்து விட்ட சம்பவம் என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் அதிகாரி ஷேக் அப்துல் அட்ஸிஸ் குறிப்பிட்டார். சுமார் இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் அங்கிருந்து இந்தோனிசியாவுக்குப் புறப்பட்டது.