கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கையால் தேர்வு எழுத தடை

2824 0

மாணவர்களின் கையெழுத்து சரிவர புரியாததால் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேனா மூலம் தேர்வு எழுத தடை விதிக்கப்படுகிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளது. இது 800 ஆண்டு பாரம்பரியம் மிக்கது. இங்கு இங்கிலாந்து மட்டுமின்றி உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இங்கு இதுவரை தேர்வுகள் பேனாமூலம் பேப்பரில் கையால் எழுதப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

தற்போது பாடங்கள் அனைத்தும் ‘லேப்டாப்’பில் ‘டைப்’ மூலம் பதிவு செய்யப்படுகிறது. அதனால் மாணவர்களின் கையெழுத்து சரிவர புரியாத நிலையில் உள்ளது. இது தேர்வுகளிலும் பிரதிபலிக்கிறது. விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்கள் மாணவர்களின் கையெழுத்து புரியாமல் தெளிவற்ற நிலைக்கு செல்கின்றனர். அது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

எனவே பேனா மூலம் தேர்வு எழுத தடை விதிக்கப்படுகிறது. எடின் பார்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்தே இம்முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Leave a comment