மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அரசியல் செய்ய நினைத்த காலம் மலையேறி விட்டதுடன் சிறுபான்மை சமூகம் சாணக்கியமாக செயற்பட்டு உரிமைகளை வென்றெடுக்கும் காலம் உதயமாகியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
வெறும் சமூக மற்றும் இன ரீதியான உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களின் ஊடாக மக்களை ஏமாற்றலாம் என நினைத்து சிலர் அரசியலை முன்னெடுக்க முயல்கின்றனர்,
ஆனால் அவற்றுக்கெல்லாம் ஏமாறுவதற்கு மக்கள் இனி மேலும் தயாராக இல்லையென்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அகமட் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச அரசியமைப்புத் திருத்த்த்தின் ஊடாக சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்து அரசியல் விடுதலையினைப் பெற்றுக்கொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சாணக்கியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.