சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச வானுர்தித் தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்க பிரிவு அதிகாரிகளால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவு நாட்டவரான இவர் டுபாயில் இருந்த குறித்த தங்கத்தை கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்க ஆபரணங்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவருடன் மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க வானுர்தித்தள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி 1.7 மில்லியன் ரூபாவாகும்.