அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியால் சட்டமா அதிபருக்கு கடிதம் – சிவி விக்னேஷ்வரன்

388 0

அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதியால் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

கண்டி பல்லேகலை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நேற்று சந்தித்ததின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளபோதும், அண்மையில் இடம்பெற்ற அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் கைதிகள் குற்றங்களை ஏற்றுக்கொண்ட அடிப்படையிலேயே சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண சட்டத்தில் குற்றத்தை ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக தண்டனை வழங்க முடியாது.

அரசியல் கைதிகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் அவர்கள் தொடர்பான குற்றங்களை அவர்களே ஏற்றுக்கொண்டதற்கமையவே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.

இது மட்டுமே ஆதாரமாகவும் உள்ளது.

எனவே, அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் அரசியல் கைதிகள் விடுவிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றபோதும், தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டே ஜனாதிபதி அதனை மேற்கொள்ளாமல் இருப்பதாவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment