அதிவேக நெடுஞ்சாலை அமைப்பு பணிகளில் மோசடி – ஜேவிபி

358 0

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம்கட்ட பணிகளுக்காக ஒரு கிலோமீட்டர் தூர நிர்மாணப் பணி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதன் மூலம்  செலவு இரு மடங்காக அதிகரிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

மூன்றாம் கட்டத்திற்காக 32.5 கிலோமீட்டர் தூரம் ஜப்பானிய நிறுவனம் ஒன்றினால் நிர்மானிக்கப்படவுள்ளது.

இதற்காக 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.

இந்த நிர்மானப் பணிகளின் மூலம் ஒரு கிலோமீட்டருக்காக 415 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த நிர்மானப் பணிகள் ஜப்பானிய நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில் பாரிய சந்தேகம் ஏற்படுவதாக அனுரகுமார திசாநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Leave a comment