பெர்பசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் இன்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
பிணை முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை பிரிவாக செயற்பட்டு வரும் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் 3 மணி நேர விசாரணைகளை மேற்கொண்டனர்.
இன்று முற்பகல் 10.15 அளவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 1.15 வரை இடம்பெற்றது.
அர்ஜூன் அலோசியஸிடம் குற்ற புலனாய்வு திணைக்களம் 4 நாட்கள் விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினமும் நேற்று முன்தினமும் விசாரணைகள் மேற்கொண்டிருந்தநிலையில், தொடர்ச்சியாக இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் விசாரணைகள் இடம்பெற்றன.