இன பிரச்சனைக்கான உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள நல்லாட்சி அரசாங்கமே சிறந்த சந்தர்ப்பம் எனவும் இதனை வடக்கு கிழக்கு தமிழ் தலைவர்கள் தவறவிட கூடாது என இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்திதுறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இன பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முனைகின்ற போது, வடகிழக்கு தமிழ் தலைவர்கள் உட்பட ஏனைய தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அத்துடன் தீர்வு திட்டத்தை உடனயாக வழங்குவதற்கும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் ராதாகிருஸ்ணன் வலியுறுத்தினார்.