காவற்துறை சேவையின் 2 ஆயிரத்து 599 பேருக்கு பதவி உயர்வு வழங்க தேசிய காவற்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முதல் முறையாக அதிகளவிலான காவற்துறையினருக்கு வழங்கப்படும் பதவி உயர்வாகும்.
இதற்கமைய காவற்துறை கான்ஸ்டபல் 2075 பேர், காவற்துறை அலுவலர்களாகவும், 189 காவற்துறை அலுவலர்கள் பிரதி காவற்துறை பரிசோதகர்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பெண் காவற்துறை அலுவலர்கள் 34 பேர், பெண் உப பரிசோதகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.